பெங்களூருக்கு இடம் பெயர்ந்த இஷாரா நாயர்!

Bookmark and Share

பெங்களூருக்கு இடம் பெயர்ந்த இஷாரா நாயர்!

சதுரங்க வேட்டை, பப்பாளி ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் இஷாரா நாயர். இந்த படங்களுக்குப்பிறகு புதிய படங்களில் நடிப்பதற்கு தீவிர வேட்டை நடத்திய அவர், கேரளாவில் இருந்தபடியே கல்லெறிந்தால் வேலைக்கு ஆகாது என்று சென்னையிலும் வீடு பார்த்து குடியேறினார்.

ஆனபோதும், அந்த படங்களில் நடித்தபோதே குண்டாக பப்ளிமாஸ் போல் இருந்த இஷாரா நாயர், அதன்பிறகும் இன்னும் ஒரு சுற்று பெருத்துப்போயிருந்ததால், அவருக்கு கதாநாயகி வேடம் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

இவர் சந்தித்த டைரக்டர்கள் அனைவருமே கேரக்டர் ரோல்களே தர முன்வந்தனர். அதனால் வெறுத்துப்போன இஷாரா நாயர், இப்போது சென்னையை காலி பண்ணி விட்டு பெங்களூரில் முகாமிட்டுள்ளார்.

இளவட்ட ஹீரோக்களுடன் நடிக்க தனது தோற்றம் பொருந்தாது என்பதால், ஓரளவு முதிர்ச்சியான ஹீரோக்களின் படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வரும் இஷாரா, சதுரங்க வேட்டை படத்தில் நடித்தபோது அப்பட நாயகன் நட்ராஜ் உள்ளிட்ட சிலர் தனக்கு சிபாரிசு செய்வதாக சொல்லி டீலில் விட்டதால், இப்போது எந்த நடிகர்களின் வார்த்தைகளையும் நம்புவதில்லையாம்.

யாராவது நான் இருக்கிறேன் என்பது போல் அவருக்கு போன் செய்தால், இதுமாதிரி சொன்ன நிறைய பேரை நான் பார்த்து விட்டேன். அதனால் இனிமேல் நான் யாரையும் நம்பத் தயாராக இல்லை என்றும் சொல்லி போனை துண்டித்து விடுகிறாராம் நடிகை. 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions