பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை

Bookmark and Share

பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை

பாலிவுட்டில் நிஷிகாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் படத்தின் மூலம், தனுஸ்ரீ தத்தாவின் தங்கை இஷிதா தத்தா அறிமுகமாகி உள்ளார்.

இஷிதா தத்தா, கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின், அவர் த்ரிஷ்யம் படத்தில் நடிப்பதற்கு புதுமுகங்களை தேர்வு செய்யும் வகையிலான ஆடிஷன் நடைபெற்றது. ஆடிஷனில், இஷிதா தத்தா தேர்வானார். படத்தில், அஜய் தேவ்கன் - ஸ்ரேயா சரண் தம்பதியின் மூத்த மகள் கேரக்டரில், இஷிதா தத்தா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம், இஷிதா தத்தா, பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.

இஷிதாவின் நடிப்பு குறித்து அஜய் தேவ்கன் கூறியதாவது, இஷிதா தத்தா சிறந்த நடிகை. த்ரிஷ்யம் படத்தில், இஷிதாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவர் திரைத்துறையில் மேலும் பல்வேறு சாதனைகள் எட்ட வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

இஷிதா தத்தா கூறியதாவது, தேசிய விருது வென்ற அஜய் தேவ்கன் சாருடனான படத்தின் மூலம், பாலிவுட்டில் நான் அறிமுகமாகியிருப்பதை, பெரும்பாக்கியமாகவே கருதுகிறேன். புதுமுகமான நான், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன என்று கூறினார் 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions