தலைமறைவான நடிகை இஷாரா அளித்த அதிர்ச்சி பதில்!

Bookmark and Share

தலைமறைவான நடிகை இஷாரா அளித்த அதிர்ச்சி பதில்!

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நடித்தவர் நடிகை இஷாரா. அந்த வரிசையில் தற்போது அவர் லாரன்ஸ் ஜோசப் தயாரிப்பில் , கெவின் ஜோசப் இயக்கும் ஒரு படத்தில் கல்லூரி அகில்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் “நடிகை இஷாரா தங்கள் படத்தில் நடிக்காமல் தலைமறைவாகிவிட்டார். அவரால் எங்களுக்கு பெருத்த நஷ்டம்” என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் அறிக்கை வெளியிட்டனர்.

இந்த புகார் குறித்து இஷாரா இந்தப் படத்துக்கு அவர்கள் கேட்ட நாட்களை 6 மாதங்கள் வரை பிரித்துக் கொடுத்தேன். என்னை வைத்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். மேலும் அவர்கள் நான் கொடுத்த தேதிகள் அனைத்தையும் வீணாக்கி விட்டார்கள்.

அது மட்டுமின்றி அப்படத்தின் இயக்குனர் கெவின் ஜோசப் எனக்கு வசனம் சொல்லிக் கொடுக்கிறேன். நடிக்க சொல்லிக் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர் நடந்து கொண்ட விதம் அநாகரீகமானது.

சுவரோடு என்னை சாய்த்து நிற்க வைத்துதான் பேசுவார். அதுவும் இரட்டை அர்த்தம் தொணிக்க… அடிக்கடி தொட்டுப்பேச முயற்சிப்பார். அதிக உரிமை எடுத்துக் கொள்வார். இப்படிப்பட்டவருடன் இணைந்து எப்படி என்னால் பணியாற்ற முடியும்.

மேலும் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் மிரட்டினார்கள். அதை சந்திக்க நானும் தயார் என்றேன். நான் போலீசில் புகார் கொடுக்காமல் இருந்ததற்காக அவர்கள்தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். என்று ஒரு திடுக்கிடும் பதில் அளித்துள்ளார் நடிகை இஷாரா.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions