இது நம்ம ஆளு படத்துக்கு தடை கேட்டு கோர்ட்டில் வழக்கு

Bookmark and Share

இது நம்ம ஆளு படத்துக்கு தடை கேட்டு கோர்ட்டில் வழக்கு

சிம்பு, நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘இதுநம்ம ஆளு’. இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தை தயாரிக்க ‘டேக் எண்டர்டைன்மென்ட்’ நிறுவனத்திடம் ரூ.2.50 கோடியை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் டி.ராஜேந்தர் கடன் வாங்கியிருந்தார். இந்த கடன் தொகையை, படம் வெளியாவதற்கு முன்பு வட்டியுடன் திருப்பித்தரவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த பணத்தை திருப்பித் தராததால், இது நம்ம ஆளு படத்தை வெளியிட தடை கேட்டு ஐகோர்ட்டில் ‘டேக்’ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, கடன் தொகையை கொடுத்து விடுவதாக டி.ராஜேந்தர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சிவராமன் ஆஜராகி, ‘கடன் வாங்கிய அசல் தொகையை மட்டும் கொடுத்து விட்டு படத்தை வெளியிட எதிர்மனுதாரர் கோரிக்கை வைக்கிறார்.
இதை ஏற்க முடியாது. எனவே, கடன் தொகை, வட்டியுடன் சேர்த்து ரூ.3.31 கோடியை கொடுக்கவும், அதன்பின்னரே படத்தை வெளியிட வேண்டும் என்றும் டி.ராஜேந்தருக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்’ என்று கூறினார்.

இதற்கு டி.ராஜேந்தர் தரப்பின் கருத்தை தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 4–ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.


Post your comment





Related News
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்.!
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது வேதாளம் சொல்லும் கதை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions