இது நம்ம ஆளு வெளியீட்டை எதிர்த்து வழக்கு

Bookmark and Share

இது நம்ம ஆளு வெளியீட்டை எதிர்த்து வழக்கு

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் படம் இது நம்ம ஆளு. இதனை டி.ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய நிலையில் படம் அப்படியே நிற்கிறது.

பாண்டியராஜும் வேறு படங்களை இயக்கச் சென்று விட்டார்.  இந்த நிலையில் இந்தப் படத்துக்கு பைனான்ஸ் செய்த டேக் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் அதன் துணைத் தலைவர் சிவராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இது நம்ம ஆளு என்ற படத்தை டி.ராஜேந்தர் தயாரிக்கிறார். தயாரிப்புக்கு பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது எங்களை அணுகினார். நாங்கள் அவருக்கு 2.50 கோடி கடன் கொடுத்தோம். கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் 7 காசோலைகள் கொடுத்தார்.

படம் வெளியிடுவதற்கு முன்பு பணத்தை திருப்பித் தந்த விடுவதாக கூறினார். தற்போது எங்களுக்கு தற்போது அவர் வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 67 லட்சம் தரவேண்டும்.

ஆனால் பணத்தை திருப்பித் தராமலேயே படத்தை வெளியிட முயற்சிப்பதாக அறிகிறோம். எங்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் படத்தை வெளியிடகூடாது என்று உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் டி.ராஜேந்தர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

 


Post your comment





Related News
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்.!
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது வேதாளம் சொல்லும் கதை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions