இது வேதாளம் சொல்லும் கதை

Bookmark and Share

இது வேதாளம் சொல்லும் கதை

கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் விடியோவை இயக்கிய ரதிந்தரன் ஆர் பிரசாத் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கு ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்று பெயர் இடப்பட்டுள்ளது.

இதில் அஷ்வின் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ), மற்றும் குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர்) இணைந்து நடிக்க உள்ளனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இத்திரைப்படத்திற்கான இசைப்பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். பிரபல ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான க்ரெக் ப்யூரிட்ஜ்( Greg Burridge) இப்படத்திற்கான சண்டை காட்சிகளை வடிவமைத்து, வில்லனாகவும் நடிக்க உள்ளார். இத்தாலியை சேர்ந்த ராபெர்டோ ஜாஜெர் (Robertto Zazzara) இப்படத்திற்கான ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார்.

இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் இம்மாதம் துவங்க உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. சண்டை காட்சிகளுக்காக அஷ்வின் உட்பட 30 மல்யுத்த வீரர்களுக்கு க்ரெக் ப்யூரிட்ஜ் பயிற்சி அளிக்கிறார்.

கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் வீ டியோ

சுமார் 40 லட்சம் பேர் கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் வீடியோவை இணையத்தில் பார்த்துள்ளனர். ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களான நிகி மினாஜ், ஆஷ்டன் குட்சர், ஷேகர் கபூர் ஆகியோர் கொடைக்கானல் ஓண்ட் வீடியோவை பாராட்டி உள்ளனர்.

ரதிந்திரன் பிரசாதின் 30 நிமிட குறும்படம் ‘ஸ்வேயர் கார்ப்பொரேஷன்’ (Swayer corporation) கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

‘இது வேதாளம் சொல்லும் கதை’ திரைப்படத்தை ஹோல் வைட் ஓர்ல்ட் ஃபிலிம்ஸ் சார்பில் பஸாக் கேஸியர் பிரசாத் (Basak Gazier Prasad) தயாரிக்க உள்ளார்.

 


Post your comment

Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்.!
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions