வனவாசம் முடிந்து இணையும் மோகன்லால்-ஐ.வி.சசி..!

Bookmark and Share

வனவாசம் முடிந்து இணையும் மோகன்லால்-ஐ.வி.சசி..!

மலையாள திரையுலகில் நாற்பது வருட வெற்றி வரலாறு கொண்டவர் இயக்குனர் ஐ.வி.சசி. நடிகை சீமாவின் கணவரான இவர் கமலை வைத்து 'குரு', ரஜினியை வைத்து 'காளி', 'எல்லாம் உன் கைராசி' ஆகிய படங்களை தமிழிலும் இயக்கியுள்ளார்.. ஏன் கமலை வைத்து இந்தியிலும் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

ஆனால் மலையாளத்திலோ இவரது பேவரைட் மம்முட்டிதான்.. கிட்டத்தட்ட எஸ்.பி.முத்துராமன் - ரஜினி கூட்டணி மாதிரி.. அதேசமயம் மோகன்லாலை வைத்தும் சில படங்களை இயக்கியுள்ளார்.

அதாவது மம்முட்டியை வைத்து ஐந்து படங்களை இயக்கினால் மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்குவார். ஆனாலும் மோகன்லாலுக்கு 'அனுராகி, தேவாசுரம்' என ஹிட்டுக்களையும் கொடுக்க தவறவில்லை.

கடைசியாக மோகன்லாலை வைத்து 2000-ல் 'ஷ்ரதா' என்ற படத்தை இயக்கினார் ஐ.வி.சசி. இப்போது வனவாசம் முடிந்தது போல் பதினான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் ஐ.வி.சசி. தனது 66 வயதில் கிட்டத்தட்ட 130 படங்களை இயக்கியுள்ள இவர், கடந்த ஐந்து வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions