நட்புக்காக சைக்கிளுக்கு 'வாய்ஸ்' கொடுக்கும் நடிகர்..!

Bookmark and Share

நட்புக்காக சைக்கிளுக்கு 'வாய்ஸ்' கொடுக்கும் நடிகர்..!

இது அரசியலுக்காக கொடுக்கும் வாய்ஸோ, அல்லது ஏதாவது பிரச்சனையின்போது உதவிக்கரம் நீட்டும் விதமாக கொடுக்கும் வாய்ஸோ இல்லை. ஒரு படம் ஆரம்பிக்கும் முன்னரோ அல்லது படத்தின் இடையில் அவ்வப்போது கதையை நகர்த்திச்செல்லும் விதமாகவோ பின்னணியில் குரல் கொடுக்கிறார்களே அந்த வாய்ஸைத்தான் சொல்ல வருகிறோம்..

மலையாளத்தில் கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான 'கூதரா' படத்தில் படத்தின் கதைச்சுருக்கம் பற்றி சொல்ல, மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் வாய்ஸ் கொடுத்திருந்தார்.

அதேபோல பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'ஆமையும் முயலும்' படமே, மோகன்லாலின் பின்னணிக்குரலுடன் தான் ஆரம்பிக்கும். இது பிரியதர்ஷனின் நட்புக்காக மோகன்லால் தனது பங்களிப்பாக தந்தது.  சரி இப்போது முக்கிய விஷயத்திற்கு வருவோம்.. தெலுங்கில் சூப்பர்ஹிட்டாகிய மரியாத ராமண்ணா தற்போது மலையாளத்தில் திலீப் நடித்துவரும் 'இவன் மரியாதராமன்' என்கிற பெயரில் ரீமேக்காகி வருகிறது.

தமிழிலும் அந்தப்படம் சந்தானம் நடிக்க 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என வெற்றி பெற்றது தெரியும் தானே.? இந்தப்படத்தின் பிரதான கதாபாத்திரமாக சைக்கிள் ஒன்று இடம்பெற்றிருகிறது அல்லவா.? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் இந்த சைக்கிள் பேசுவது போன்ற காட்சிகளுக்கு டி.ராஜேந்தர் குரல் கொடுத்திருந்தார்.

மலையாளத்தில் இந்த சைக்கிளுக்காக குரல் கொடுத்திருப்பவர் காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூட்.. திலீப்புடன் ஏற்கனவே பல படங்களில் நடித்திருக்கும், சுராஜ் தற்போது 'சந்திரேட்டன் இவிடேயே' என்கிற படத்திலும் திலீப்பின் நண்பனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions