றெக்கை கட்டி பறக்குதய்யா 'மரியாத ராமன்' சைக்கிள்..!

Bookmark and Share

றெக்கை கட்டி பறக்குதய்யா 'மரியாத ராமன்' சைக்கிள்..!

மலையாள திரையுலகை பொறுத்தவரையில் மற்ற மொழிகளில் இருந்து வெற்றிபெற்ற ஒரு படத்தின் கதையை வாங்கி ரீமேக் பண்ணுவது என்பது அசாதாரணமான விஷயம்.. காரணம் கதையை உற்பத்தி பண்ணுவதற்கென்றே பெருங்கூட்டம் அங்கே இருக்கிறது.

அதையும் தாண்டி சில படங்களை ரீமேக் செய்கிறார்கள் என்றால் அந்தக்கதை மலையாளத்தில் நிச்சயம் எடுபடும் என்கிற நம்பிக்கை இருந்தால் தான். அந்தவகையில் தெலுங்கில் சூப்பர்ஹிட்டாகிய மரியாத ராமண்ணா தற்போது மலையாளத்தில் திலீப் நடித்துவரும் 'இவன் மரியாதராமன்' படமாக ரீமேக் வளையத்திற்குள் வந்ததும் இப்படித்தான்.  

காரணம் மலையாள படங்களின் அடிநாதமாக விளங்கும் காமெடி லைனை அந்தப்படம் பிரதிபலித்தது. அதனால் தான் தமிழிலும் அந்தப்படம் சந்தானம் நடிக்க 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என வெற்றி பெற்றது.

இந்தப்படத்தின் பிரதான கதாபாத்திரமாக சைக்கிள் ஒன்று இடம்பெற்றிருப்பது தெரியும் தானே.. இப்போது அதுபோன்ற ஒரு சைக்கிளில் தான் கதாநாயகி நிக்கி கல்ராணியை  வைத்து அண்ணாமலை ரஜினி பாணியில் சுற்றி வருவது சுவராஸ்யமான கலாட்டாவாக வந்திருக்கிறதாம். சமீபத்தில் இந்தப்படத்தின் மேக்கிங் காட்சிகள் குறித்த நான்கு நிமிட வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
ரசிகர்களின் விமர்சனத்தால் நீக்கப்படும் காட்சிகள்
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions