நாடக நடிகர்கள் ரித்தீஷ் மீது கொலை மிரட்டல் புகார்

Bookmark and Share

நாடக நடிகர்கள் ரித்தீஷ் மீது கொலை மிரட்டல் புகார்

நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஏராளமான திரை உலக மற்றும் நாடக உலக நடிகர்-நடிகைகள் திரண்டு வந்தனர். நடிகர் எம்.ஏ. கிச்சா ரமேஷ் தலைமையில் வந்த அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் ரித்தீஷ் மீது கொலை மிரட்டல் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். 

பின்னர் கிச்சா ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “நான் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகரில் வசிக்கிறேன்.

சினிமாவில் நடித்து வருகிறேன். நடிகர் சங்க உறுப்பினராக உள்ளேன். இங்கு வந்துள்ள அனைவரும் நடிகர் சங்க உறுப்பினர்கள் தான். நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறோம். அவருக்கு ஓட்டும் சேகரித்து வருகிறோம். 

இதனால் எதிர் குழுவைச் சேர்ந்த நடிகர் ரித்தீஷ், பூச்சிமுருகன் மற்றும் நடிகர் விஜய் கார்த்திக் ஆகியோர் எங்களை ஏற்கனவே மிரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் எனது செல்போனில் வட பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் போல பேசி நடிகர் ரித்தீஷ் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ரித்தீஷ் ஏற்கனவே தி.மு.க.எம்.பி.யாக இருந்தவர்.

இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த பூச்சிமுருகனுடன் சேர்ந்து எங்களை மிரட்டுகிறார். 

ரித்தீஷ் மிரட்டிய பேச்சை செல்போனில் பதிவு செய்து அதை சி.டி.யாக போட்டு போலீசாரிடம் கொடுத்துள்ளேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதுபோன்ற புகார் மனுக்கள் சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவிலும், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions