தமிழில் வெளிவரும் ஜாக்கிசானின் புதிய படம்

Bookmark and Share

தமிழில் வெளிவரும் ஜாக்கிசானின் புதிய படம்

வயது 60 தாண்டினாலும், மகன் போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜெயிலுக்குப் போனாலும் ஜாக்கிசான் நடிப்பதை விடுவதாக இல்லை. தற்போது அவர் நடித்து வெளிவந்துள்ள படம் டிராகன் பிலேட்.

டேனியல் லீ இயக்கி உள்ள இந்தப் படத்தை 9 நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜாக்கி சானுடன், ஜான் கவுசக், ஆன்ட்ரியன் ப்ரவ்டி, லின் பெங் உள்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

ஹிஸ்டாரிக்கல், அமானுஷ்யம், பேண்டசி, கலந்த படம். ஜாக்கியின் பேவரைட் சண்டைக் காட்சிகளும், கமெடி காட்சிகளும் நிறைந்தது. சீன மற்றும் ஆங்கில மொழியில் 65 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தைவான், சீனா, ஹாங்கில் கடந்த மாதமே வெளியாகிவிட்டது. உலகின் மற்ற நாடுகளில் வருகிற 27ந் தேதி வெளிவருகிறது. தமிழில் பெயரை மாற்றாமல் டிராகன் பிலேட் என்ற பெயரிலேயே டப் செய்து வெளியிடுகிறார்கள்.

2டி, 3டி, ஐமேக்ஸ் 3டி ஆகிய தொழில்நுட்பங்களில் வெளிவருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அஸ்வினி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஜாக்கிசான் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions