ஜாக்கிசான் பாணியில் வடிவேலு போடும் காமெடி சண்டை

Bookmark and Share

ஜாக்கிசான் பாணியில் வடிவேலு போடும் காமெடி சண்டை

காமெடி நடிகர் வடிவேல் ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’, படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது ‘எலி’ என்ற படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். யுவராஜ் தயாளன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

சென்னை பின்னி மில்லில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து வடிவேலு சதா ஆடிப்பாடும் டூயட் பாடல் காட்சியொன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. வசன காட்சிகளும் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் வடிவேலு, வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியும் இடம் பெறுகிறது. பிரத்யேகமாக இந்த சண்டை காட்சியை படமாக்குகின்றனர். முதலில் ஆக்ஷன் சீன்களில் நடிக்க வடிவேலு தயக்கம் காட்டினாராம்.

அவருக்கு இயக்குனர் ஜாக்கிசான் படங்களில் இடம்பெறும் காமெடி சண்டையை போல் இதை எடுப்பதாகவும், குழந்தைகள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஜாக்கிசானின் காமெடி சண்டை காட்சிகளையும் காட்டியுள்ளார். இதையடுத்து வடிவேலு இந்த சண்டைக் காட்சியில் நடிக்க சம்மதித்தாராம். ஜாக்சிசான் சண்டை காட்சிகள் போன்று இதை எடுக்கின்றனர். 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டோரி! என்ன தெரியுமா
கவுரவ ஆஸ்கார் விருது பெற்றார் நடிகர் ஜாக்கிசான்
வெளியான 10 நாளில் இத்தனை கோடி வசூலா- தலைச்சுற்றி போகும் குங் பூ யோகா வசூல்
பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத ஜாக்கி ஜான் பார்த்தவர்கள் அனைவரையும் அழ வைத்த நிகழ்வு
ஜாக்கிஜான் சவாரி செய்த சைக்கிள் ரூ. 10 லட்சத்துக்கு ஏலம்
உலகத்துலயே பெஸ்ட் இந்திப் பட டான்ஸ்தான்! - ஜாக்கி சான்
ஜாக்கி சான், அமிரா தஸ்தூர் நடிக்கும் குங்ஃபூ யோகா ரிலீஸ் தேதி இதோ!
படப்பிடிப்புக்காக இந்தியா வரும் ஜாக்கிசான்!
அறிமுகமாகும் ஜாக்கியின் மகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions