பாலுமகேந்திரா சீடர் இயக்கும் மலையாள படத்தில் வில்லனாக ஜாக்கிஷெராப்..!

Bookmark and Share

பாலுமகேந்திரா சீடர் இயக்கும் மலையாள படத்தில் வில்லனாக ஜாக்கிஷெராப்..!

ஜாக்கி ஷெராப் எந்த யோசனையும் செய்யாமல் ஒத்துக்கொண்டதில் ஆச்சர்யம் இல்லை. காரணம் நடிக்க அழைப்பு வந்திருப்பது 'சில நேரங்களில் சிலர்' என்கிற மலையாள படத்தில்.. மலையாளம் ஒன்று அவருக்கு புதிதல்ல.

பல வருடங்களுக்கு முன் 'பிளாட்பாரம் நம்பர்-1' மற்றும் 'அதிசயம்' என இரண்டு மலையாளப்படங்களில் நடித்துள்ளார் ஜாக்கிஷெராப். தற்போது அவரை நடிக்க அழைத்தது இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யரான ஸ்ரீநிவாசன் பரமேஸ்வரன் என்பதுதான் விஷேசம்.

கதையோ மும்பை ஏரியாவில் சுற்றிவருகிறது. ஆகவே ஷூட்டிங் சொந்த ஊரில் என்பது கூடுதல் வசதி. இத்தனை சாதகமான அம்சங்கள் இருக்கும்போது அவர் ஒத்துக்கொள்ளாவிட்டால் தான் ஆச்சர்யம்.

இந்தப்படத்தில் பொருளாதார வல்லுனராக நடிக்கும் ஜாக்கிஷெராப்புக்கு படத்தில் வில்லன் வேடம் தான்.  'ஹோட்டல் கலிபோர்னியா' என்கிற படத்திற்கு கதை எழுதிய அஜி ஜான் என்பவர்தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.

வழக்கமாக மும்பையின் அடையாளங்களாக படங்களில் காட்டப்படும் இந்தியா கேட், தாராவி, அந்தேரி, கிராண்ட் ரோடு ஆகிய  பகுதிகளை தவிர்த்து இன்னும் பலர் அறியாத மும்பையின் வேறு ஒரு பக்கத்தை இந்தப்படத்தில் காட்ட இருக்கிறார்களாம். 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
ஜாக்கி சான் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டோரி! என்ன தெரியுமா
கவுரவ ஆஸ்கார் விருது பெற்றார் நடிகர் ஜாக்கிசான்
வெளியான 10 நாளில் இத்தனை கோடி வசூலா- தலைச்சுற்றி போகும் குங் பூ யோகா வசூல்
பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத ஜாக்கி ஜான் பார்த்தவர்கள் அனைவரையும் அழ வைத்த நிகழ்வு
ஜாக்கிஜான் சவாரி செய்த சைக்கிள் ரூ. 10 லட்சத்துக்கு ஏலம்
உலகத்துலயே பெஸ்ட் இந்திப் பட டான்ஸ்தான்! - ஜாக்கி சான்
ஜாக்கி சான், அமிரா தஸ்தூர் நடிக்கும் குங்ஃபூ யோகா ரிலீஸ் தேதி இதோ!
படப்பிடிப்புக்காக இந்தியா வரும் ஜாக்கிசான்!
அறிமுகமாகும் ஜாக்கியின் மகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions