மே 29யில் ஜாதூகாடு ரிலீஸ்

Bookmark and Share

மே 29யில் ஜாதூகாடு ரிலீஸ்

பிரபல யங் ஹீரோவான நாக சௌரியா மிகவும் எதிர்பார்க்கும் படமான ஜாதூகாடு இந்த மாதம் 29ம் தேதி ரிலீசாகின்றது. இந்த படத்தின் ஹீரோவான நாக சௌரியா முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக நாக சௌரியா பம்பரமாக சுற்றி வருகிறார்.

ஹர ஹர மகாதேவா என்ற புகழ் பெற்ற சீரியலில் பார்வதி அம்மனாக நடித்த சொனாரிகா  பாடோரியா என்பவர் இந்த படம் மூலம் கதாநாயகியாகிறார். சிந்தகாயல ரவி பட புகழ் யோகேஷ் இந்த படத்தை இயக்குகிறார்.

பிரபல சத்யா என்டர்டேன்மென்ட் நிறுவனம் சார்பாக வி வி என் பிரசாத் தயாரிக்கிறார்.பிரபல இசை அமைப்பாளரான சாகர் மகதி இசை அமைக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions