ஜாதுகாடு ரிலீஸ் தள்ளி போய் உள்ளது...!

Bookmark and Share

ஜாதுகாடு ரிலீஸ் தள்ளி போய் உள்ளது...!

பிரபல ஹீரோவான நாக சௌரியா மிகவும் எதிர்பார்த்து நடித்து இருக்கும் ஜாதுகாடு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது. இந்த படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீசாக இருந்தது நினைவிருக்கலாம். எந்த தேதியில் ரிலீஸ் ஆகும் என்ற செய்தியை விரைவில் இந்த படக்குழுவினர் தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

இந்த படத்தில் ஹீரோ நாக சௌரியா வாழ்கையில் மிகப்பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பவராக வருகிறார். கொடுத்த கடனை வசூல் செய்பவராக அவர் நடித்திருக்கிறார் என்று கூறப்படு கின்றது. இந்நிலையில் தான் அவர் நர்சான கதாநாயகி சொனாரிகாவை சந்திக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

 விக்டரி வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற  சிந்தகாயல ரவி என்ற படத்தை இயக்கிய யோகேஷ் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். இது ஒரு ஆக்ஷன் மாஸ் என்ட்டர்டைனர்  ஆகும்.

சத்யா எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் வி.வி.என். பிரசாத் இந்த படத்தை தயாரிக்கிறார். இதுவரை மென்மையான கேரக்டர்களில் நடித்த நாக சௌர்யாவை, ஜாதுகாடு படத்தில் மாஸ் அப்பீலோடு ரொம்ப என்ர்ஜிடிக்காக காணலாம்.

பிரபல இசையமைப்பாளர் மணி ஷர்மாவின் மகன் சாகர் மகதி இசையமைக்கிறார்.  சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மற்றும் இப்படத்தில் கோடா ஸ்ரீனிவாச ராவ், அஜய், தாகுபோது ரமேஷ், பிரபாஸ் ஸ்ரீனு, ராக்கெட் ராகவா, அதுர்ஸ் ரகு, சத்யா, பிஷ் வெங்கட் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

 

 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions