நல்ல மாற்றங்களுடன் நண்டு ஜெகன்

Bookmark and Share

நல்ல மாற்றங்களுடன் நண்டு ஜெகன்

தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை வா.. போ.. என்று ஒருமையில் பேசுகிறார் என்று சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளரும், சிரிப்பு நடிகருமான நண்டு ஜெகன் மீது சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்த்து.

விஜய் டிவியில் கனெக்ஷன் என்ற நிகழ்ச்சியைத் கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் நண்டு ஜெகன், அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களையும் வா .. போ.. என்று ஒருமையில் அழைத்து மரியாதை இல்லாமல் பேசுவதோடு சகட்டுமேனிக்கு தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசி வருகிறார்.

ஜெகனின் இந்தப் பேச்சு அண்மையில் பிரச்சனையாகி கனெக்ஷன் நிகழ்ச்சியிலேயே விஜய் டிவி வருத்தம் தெரிவித்தது.

சில தினங்களுக்கு முன், இணையதளங்களில் இது பற்றிய பரபரப்பு செய்திகள் வெளியாகின. அச் செய்திகளைப் பார்த்துவிட்டு, “நான் ஒருவேளை பெண்களை காயப்படுத்தி இருந்தால் உண்மையிலேயே வருந்துகிறேன்.

மேலும் உலகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் நான் மதிக்கிறேன்”, என்று ட்விட்டரில் பதில் அளித்து தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஜெகன். மக்கள், ஊடகங்கள் சுட்டிக்காட்டும் குறைகளை களைந்து தன்னை மாற்றிக் கொள்வது என்பது பாராட்டத் தகுந்த விஷயம்தான்.  


Post your comment





Related News
பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!
பெண்ணின் நிர்வாண பட சர்ச்சையில் இயக்குநர்
வெட்கப்பட வைத்த எமிஜாக்சன்!
பூரி ஜெகன்நாத் - வருண் இணையும் லோபர்
நிதின்-பூரி ஜெகன்நாத் படம் கைவிடப்பட்டதா?
பூரி ஜெகன்நாத் - குரு வர்மாவை மிஞ்சும் சிஷ்யன்
பூரி ஜெகன்நாத் மீது சிரஞ்சீவி அதிருப்தி..?
நிதின்-பூரி ஜெகன்நாத் படப்பிடிப்பு ஜூன் 25 முதல் துவக்கம்
மெகா ஸ்டாரை பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்
படத்தின் தலைப்பை தேர்வு செய்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions