அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஆசை: தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு

Bookmark and Share

அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஆசை: தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு

மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஸ்ரீமந்த்துடு’. இப்படத்தை கொரட்டால சிவா இயக்கியுள்ளார். மகேஷ்பாபு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும், ஜெகபதி பாபு, சுகன்யா உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

இப்படம் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது. இதன் ஆடியோ வெளியீடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் ஜெகபதி பாபு பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறும்போது, சினிமாவில் முதல்முறையாக இப்படத்தின் மூலம் நான் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என்னுடைய மனைவியாக சுகன்யா நடிக்கிறார். மகேஷ்பாபு ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். திறமையான நடிகர். அழகானவரும்கூட. அவருக்கு அப்பாவாக நடித்தது புது அனுபவமாக இருந்தது. 

இந்த படத்துக்கு சால்ட் அன்ட் பெப்பர் லுக் தேவைப்பட்டதால் அந்த ஸ்டைலில் நடித்தேன். அஜித்துடன் ஒரு படம் பண்ண ஆசை. அவருக்கு வில்லனாகவே அல்லது நண்பனாகவோ நடிக்கவேண்டும். 

என்னுடைய கேரியரில் நான் இப்படித்தான் நடிக்கவேண்டும் என்று எந்த முடிவும் எடுத்துக் கொண்டது கிடையாது. எந்த மாதிரி நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்பதையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். 

ரஜினியுடன் இணைந்து பணியாற்றவே ‘லிங்கா’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தேன். மற்றபடி, புகழுக்காகவே, பணத்துக்காகவே அந்த படத்தில் நடிக்கவில்லை. ‘தாண்டவம்’ படம் தோல்வியடைந்தது சற்று வருத்தமே. இருப்பினும் செல்வராகவன் இயக்கும் ‘கான்’ படத்தின் மூலம் தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். 

சினிமாவில் யாருடைய இடத்தையும் பிடிக்கவேண்டும் என்ற யோசனை கிடையாது. எனக்கென்று ஒரு இடம் உண்டு. அதேபோல், படங்களை இயக்கும் எண்ணமோ, தயாரிக்கும் எண்ணமோ எதுவும் கிடையாது. 

நான் பிறந்ததுதான் விஜயவாடா என்றாலும், படிப்பு, கல்யாணம் எல்லாமே சென்னையில்தான். அதனால், எனக்கு தெலுங்கு வேறு, தமிழ் வேறு என்பது கிடையாது. நான் அரசியலுக்கு வர எனக்கு நிறைய அழைப்புகள் வந்தது. எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை என்றார்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions