ப்ரியாமணிக்கு சிபாரிசு செய்யும் ஜெகபதிபாபு!

Bookmark and Share

ப்ரியாமணிக்கு சிபாரிசு செய்யும் ஜெகபதிபாபு!

கண்களால் கைது செய் படத்தில் பாரதிராஜாவினால் அறிமுகம் செய்யப்பட்டவர் ப்ரியாமணி. அதோடு, பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதும் பெற்ற நடிகை.

ஆனபோதும், அதற்கு முன்புவரை தமிழில் தொடர்ச்சியாக நடித்து வந்த ப்ரியாமணிக்கு பின்னர் சரிவர படங்கள் இல்லை. அதன்பிறகு தமிழ், கன்னடத்தில் உருவான சாருலதா படத்தில் இரட்டையர் வேடத்தில் நடித்தார்.

இது எந்த நடிகைகளுக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு. ஆனால், இந்த படமும் ப்ரியாமணிக்கு கைகொடுக்கவில்லை. பின்னர் தமிழில் அவருக்கு படவாய்ப்புகளே இல்லை.

அதனால் தெலுங்கு, கன்னடத்தில் முழுநேர நடிகையாகி விட்ட ப்ரியாமணி, இப்போதும் அங்கு பிசியாக நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதோடு, அங்குள்ள முன்னணி நடிகர்களே அவருக்கு நேரடி சிபாரிசும் செய்கிறார்களாம்.

குறிப்பாக, தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, தான் நடிக்காத படமாக இருந்தாலும், அந்த படங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தனக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தால் ப்ரியாமணிக்கு சான்ஸ் கொடுங்கள் என்கிறாராம்.

காரணம், தன்னுடன் இணைந்து ப்ரியாமணி நடித்த ஒரு படத்தில் அவரது நடிப்பு ஜெகபதிபாபுவை வெகுவாக கவர்ந்து விட்டதாம். அதனால், இப்போதைய நடிகைகளில் ப்ரியாமணி நல்ல திறமையானவர் என்று சான்றிதழ் கொடுத்து வருகிறாராம் ஜெகபதிபாபு.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions