அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோனது ஜக்கா ஜஸோஸ்

Bookmark and Share

அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோனது ஜக்கா ஜஸோஸ்

ரன்பீர் கபூரின் நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக தோல்வியடைந்து வருகின்றன. இதையடுத்து, ரன்பீர் கபூர் மிகுந்த சிரத்தையடுத்து, கவனமாக கதை தேர்வு செய்து, ஜக்கா ஜஸோஸ் படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கடந்த மே மாதமே படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை.

இதையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியை, ஆகஸ்ட் மாதத்திற்கும், பின் நவம்பர் மாதத்திற்கும் ஒத்திவைத்தனர். நவம்பரில் படம் உறுதியாக வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions