ஜெய் படத்துக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Bookmark and Share

ஜெய் படத்துக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜெய், யாமி கவுதம், சந்தானம் நடித்துள்ள படம் தமிழ் செலவனும் தனியார் அஞ்சலும். பிரேம்சி இயக்கி உள்ளார். இந்தப் படத்தை கவுதம் மேனன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். படத்தின் வேலைகள் முடிந்து ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்டது.

சில பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு படம் வெளிவர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கவுதம் வாசுதேவ மேனனின் முன்னாள் நண்பரும், பங்குதாரருமான எல்ரெட் குமார் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்துக்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "நீதானே என் பொன்வசந்தம் படம் இயக்கி தயாரித்து தர கவுதம் வாசுதேவனுக்கு, ரூ. 13 கோடியே 27 லட்சம் கொடுத்தேன்.

ஆனால் அவர் திட்டமிட்டமிட்டபடி படத்தை எடுக்காமல் உள்ளூரிலேயே படத்தை முடித்துவிட்டு எங்கள் பணம்  ரூ. 8 கோடியை கொண்டு சென்னை அடையாறில் வீடு வாங்கியுள்ளார்.

படமும் தோல்வி அடைந்து பெரும் நஷ்டத்தை அடைந்தேன். இதனால் எனக்கு வரவேண்டிய ரூ.  8 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.10 கோடியே 67 லட்சத்தை தந்த பிறகே தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தை வெளியிட வேண்டும். எனவே படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம். படத்துக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது. பண விவகாரம் குறித்து 4 வாரத்துக்குள் கவுதம் வாசுதேவ மேனன் எழுத்துபூர்வமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.


Post your comment





Related News
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions