ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்

Bookmark and Share

ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்

அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதற்கு முன்பாக வடசென்னை பின்னணியில் புதிய படமொன்றை இயக்குகிறார் கோபி. இந்த படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார்.

ஜெய் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குத்துச் சண்டையை மையப்படுத்தி இந்த படம் உருவாகுவதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், வட சென்னையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் திறமை மற்றும் அந்த பகுதியில் வாழும் இளைஞர்களின் கால்பந்தாட்ட திறமையை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

காமெடி நடிகர் டேனியல் அனி போப் மற்றும் கல்லூரி வினோத் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions