என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா.? ஜெய்க்கு ஒரு குட்டு!

Bookmark and Share

என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா.? ஜெய்க்கு ஒரு குட்டு!

இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகர் ஜெய். பகவதி படத்தில் விஜய் தம்பியாக சிறிய ரோலில் தலைகாட்டியவர், பின்னர் சென்னை-28 படத்திலும் முக்கிய ரோலில் நடித்தார். அதனைத்தொடர்ந்து, அவர் நடிப்பில் வௌியான சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் படங்கள் ஜெய்யை எல்லோருக்கும் அடையாளம் காட்டியது. வெற்றி-தோல்வி என மாறி மாறி பயணித்து வந்தார் ஜெய். தற்போது வலியவன், புகழ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களின் வெற்றியை தொடர்ந்து சரவணன், மீண்டும் ஜெய்யை கொண்டு இயக்கியுள்ள படம் வலியவன். இப்படத்தின் ஷூட்டிங் எப்போதே முடிய வேண்டியதாம். ஆனால் ஜெய் செய்த குளறுபடியால் படம் தாமதமாகி கொண்டே போனதாம். சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங் வராதது, டப்பிங் பேச சரியாக வராதது என ஏகப்பட்ட குளறுபடிகள் செய்தாராம் ஜெய். 

மேலும் பெரிய நடிகர்கள் போன்று நான் புரொமோஷன் வேலைகளில் எல்லாம் பங்கேற்க மாட்டேன் என்கிறார். அதேசமயம் ரேஸ், பார்ட்டி என்று தவறாமால் ஆஜராகிவிடுகிறாராம். இப்படத்தின் ஷூட்டிங் நடந்தபோது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 10 நாள் விடுமுறை எடுத்து கொண்டாராம், அதோடு பொங்கலுக்கு 5 நாள் விடுமுறை என்று தொடர்ந்து ஷூட்டிங்கை தள்ளி போட்டு கொண்டே இருந்துள்ளார். மேலும் இயக்குநருடன் ஏற்பட்ட ஈகோ பிரச்னையாலும் படத்தின் ஷூட்டிங் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாம். அதோடு டப்பிங் வேலைகளிலும் ஏகப்பட்ட குளறுபடி செய்தாராம். இப்படி இவர் செய்த குளறுபடியால் பிப்., 13ம் தேதி ரிலீஸாக இருந்த வலியவன் படம் இப்போது மேலும் பல நாட்கள் தள்ளி போய் உள்ளது. 

ஜெய்யின் இந்த குளறுபடியை பார்த்து விட்டு தயாரிப்பாளரும், இயக்குநரும் என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா என புலம்பி வருகின்றனர். அந்தக்கால சினிமாவில் இருந்தவர்கள், உதாரணமாக சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் எல்லாம் சொன்ன தேதியில், சொன்ன நேரத்திற்கு முன்பாகவே படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்துவிடுவார்கள். மேலும் டப்பிங் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் பெர்பெக்ட்டாக இருப்பார்கள். ஏன்., இன்றைக்கு இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்று வளர்ந்த எல்லா நடிகர்களும் தங்களது தொழில் பக்தியாக இருக்கிறார்கள். ஆனால் வளர்ந்து வரும் நடிகரான ஜெய்யோ இப்படி செய்தால் எப்படி தன் சினிமா கேரியரை இன்னும் வளர்ச்சிக்கு பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

சினிமாவில் ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு காசு என்பார்கள், தயாரிப்பாளர்கள் பணம் போட்டு படம் எடுக்கும் வேளையில் அதை ஹீரோக்களும் உணர்ந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் அவரும் முன்னேற முடியும், தான் எடுக்கின்றன படமும் சிறப்பாக வரும். இதை ஜெய் புரிந்து கொண்டு நடந்தால் சரி!


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions