பிரபல நடிகை கேட்கும் ஜெய்!

Bookmark and Share

பிரபல நடிகை கேட்கும் ஜெய்!

வடகறி, திருமணம் என்னும் நிக்கா படங்களுக்கு பிறகு ஜெய்யின் நடிப்பில் உருவான வேட்டை மன்னன், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், அர்ஜூனன் காதலி ஆகிய படங்கள் கிடப்பில் கிடக்கின்றன.

அதனால் இப்போது அந்த படங்களை கிட்டத்தட்ட மறந்தே விட்ட ஜெய், புகழ், வலியவன் படங்களில் முழுவீச்சில் இருக்கிறார். இதில் வலியவன் படத்தில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும், புகழ் படத்தில் இவன் வேற மாதிரி சுரபியும் நடித்துள்ளனர். இவர்களில் ஆண்ட்ரியா ஓரளவு பேசப்படும் நடிகைதான் என்றாலும், இது போதாது என்கிறாராம் ஜெய்.

அதாவது, ராஜா ராணி படத்தில் தனக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தது போன்று பிரபல நடிகைகளாக தன்னுடன் ஜோடி சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் அவர். அதனால் தற்போது இரண்டு டைரக்டர்களிடம் கதை கேட்டிருக்கும் ஜெய், இந்த படங்களுக்கு நான் கால்சீட் தர வேண்டும் என்றால் மேல்தட்டு ஹீரோயினை புக் பண்ணுங்கள்.

அதன்பிறகுதான் நான் கால்சீட் தருவது பற்றி முடிவெடுப்பேன் என்று கண்டிசனாக சொல்லியிருக்கிறாராம். ஆக, இதுவரை கதையை மட்டுமே கேட்டு படங்களை ஓகே செய்து வந்த ஜெய்யும், இப்போது கதாநாயகி விவகாரத்தில் மூக்கை நுழைப்பதால் அவரிடம் கதை சொல்லி திருப்திபடுத்திய டைரக்டர்கள், இப்போது அவர் எதிர்பார்க்கிற மாதிரி கதாநாயகியை புக் பண்ண வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions