ஜீவா படத்தில் நடிக்கும் ஜெய்!

Bookmark and Share

ஜீவா படத்தில் நடிக்கும் ஜெய்!

ஜீவா நடிப்பில் சமீபத்தில் ‘போக்கிரி ராஜா’ படம் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதவிர, ஜீவா நடிப்பில் ‘திருநாள்’ என்கிற படமும் படப்பிடிப்பில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், அட்லி தயாரிக்கும் ‘சங்கலி பங்கிலி கதவத் தொற’ என்ற படத்திலும் ஜீவா நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கியிருக்கிறது.

திகில் கலந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தை ஐக் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பழனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜெய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜெய் நிறைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஆனால், ஜீவாவின் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. 

மேலும், இப்படத்தில் சூரி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions