மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்

Bookmark and Share

மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்

2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு.. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது. 

கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர். C இயக்க அவ்னி மூவி மேக்கரிஸ் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முற்று பெற்ற நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். 

டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 11 மணிக்கு படத்தின் தயாரிப்பாளர்  குஷ்பு, படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர் யூடியூப்பில் No.1 - ல் டிரெண்டாகி தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

கலகலப்பு - 2 ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன்  ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர். 

கலகலப்பு 2 படத்தை, 2018 ஆம் வருட தொடக்கத்தில் ஜனவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions