சி.எஸ்.கே.வில் வெல்வரா ஜெய் குஹேய்னி

Bookmark and Share

சி.எஸ்.கே.வில் வெல்வரா ஜெய் குஹேய்னி

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தில் அறிமுகமானவர் ஜெய் குஹேய்னி. சென்னையில் வசதியான குடும்பத்து பெண். ஆனாலும் சினிமா மீது அவருக்கு தீராத காதல். முறைப்படி பரதநாட்டியம் கற்றவர்.

வெளிநாட்டில் சினிமா தொழில்நுட்பம் கற்றவர். முதல் படத்தில் ஹீரோயினுக்கான முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் நடிக்க நிறைய வாய்ப்பிருந்த காரணத்தால் ஆரோகணத்தில் நடித்தார்.

அடுத்து சிறு பட்ஜெட்டில் தயாரான மெய்யழகி என்ற படத்தில் நடித்தார். மனவளர்ச்சி குன்றிய தம்பியை கஷ்டப்பட்டு வளர்க்கும் ஒரு அக்காவின் கேரக்டரில் நடித்தார். தன்னை விட வயதில் மூத்த ஒரு இளைஞனுக்கு கிராமத்து அக்காவாக நடித்த துணிச்சல் இந்த இளம் வயதில் வேறு எந்த நடிகைக்கும் வந்திருக்காது. அந்தப் படத்தை மீடியாக்கள் பாராட்டினாலும் மக்களின் கவனத்துக்கு வராமலேயே போய்விட்டது.

மெய்யழகி மக்களிடம் உரிய முறையில் போய் சேர்ந்திருந்தால் ஜெய் குஹேனியின் இன்றைய உயரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். தப்போது சி.எஸ்.கே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

மூன்று ஹீரோக்களின் கதையை இணைக்கிற முக்கியமான கேரக்டர் அவருக்கு. சினிமாவில் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல், சினிமாவில் நம்பர் ஒண் இடத்தை பிடித்து, கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் நல்ல படங்களை தேடித் தேடி சென்று நடிக்கிற ஜெய் குஹேய்னி சிஎஸ்கேவில் வெல்வரா என்பது படம் வெளிவரும்போது தெரியவரும்.


Post your comment





Related News
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions