உணவுகளை வைத்தே கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் ஜெய் குஹைனி!

Bookmark and Share

உணவுகளை வைத்தே கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் ஜெய் குஹைனி!

ஆரோகனம், மெய்யழகி உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் ஜெய் குஹைனி. தற்போது மையம் என்ற படத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்ற நோக்கத்துடன் நடித்து வரும் இந்த ஜெய் குஹைனி, உணவுகளை ருசி பார்ப்பதில் கைதேர்ந்தவராம்.

குறிப்பாக, தான் எந்த ஊருக்கு சென்றாலும், முதலில் அங்குள்ள சிறப்பு மிக்க உணவுகள் என்னென்ன என்பதை கேட்டறிந்து உடனே சாப்பிட்டு விடுவாராம்.

அது எவ்வளவு காஸ்ட்லியானது என்றாலும் கவலைப்பட மாட்டாராம். அந்த வகையில், அவர் வெளியூர்களுக்கு சென்றால் சாப்பிட்ட பில்லே பெரிய தொகையாகி விடுமாம்.

இப்படி உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்பது பற்றி அவர் மேலும் கூறும்போது, நான் வித்தியாசமான உணவுகளை சுவைக்க விரும்புவேன். சாப்பாடு விசயத்தில் வஞ்சணையே செய்ய மாட்டேன். வீட்டிலும் ஏதாவது விதவிதமாக கேட்டுக்கொண்டேயிருப்பேன்.

ஆனால் இதற்கு பின்னால் இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. அதாவது ஒவ்வொரு நாடுகளுக்கு செல்லும்போதும் அவர்களின் உணவை வைத்தே அவர்களின் கல்ச்சரை தெரிந்து கொள்வேன்.

அதை வைத்து அந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு ரசனையானவர்கள், டேஸ்டானவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்கிறார் ஜெய் குஹைனி.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.!
ஜெய் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions