ஜெய்க்கு ஜோடியானார் டாப்சி

Bookmark and Share

ஜெய்க்கு ஜோடியானார் டாப்சி

‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’ ஆகிய படங்களை இயக்கிய திரு, தற்போது ஜெய்யை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக திரிஷா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், திரிஷா தரப்பிலிருந்தோ, படக்குழுவினர் தரப்பிலிருந்தே இந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக டாப்சி தேர்வாகியுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் திரு கூறியுள்ளார். மேலும்,  இப்படத்தில் டாப்சி கும்பகோணத்தை சேர்ந்த பெண்ணாக வருகிறாராம். ஆகையால், டாப்சி சம்பந்தமான காட்சிகளை கும்பகோணத்தில் படமாக்க இருக்கிறார்கள். இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் படப்பிடிப்பை தொடங்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்கவிருக்கிறராம். இதற்கான தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சுஷாந்த் பிரசாத் மற்றும் வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார்.  


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions