ஜெய்யின் மார்க்கெட்டை சரித்த வலியவன்!

Bookmark and Share

ஜெய்யின் மார்க்கெட்டை சரித்த வலியவன்!

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கிய முதல் படம் எங்கேயும் எப்போதும். அப்படத்தில் ஜெய்-அஞ்சலியின் காம்பினேசன் பேசப்பட்டது. குறிப்பாக, ஒரு பெண்ணின் மனநிலை கொண்டவராக ஜெய் நடித்திருந்தார். அப்படமும் சூப்பர் ஹிட்டானது.  

அதையடுத்து விக்ரம்பிரபு நடிப்பில் இவன்வேற மாதிரி படத்தை இயக்கிய சரவணன், தனது 3-வது படத்தில் மீண்டும் ஜெய்யுடன் இணைந்தார். அவரை அதிரடியான ஆக்சன் ஹீரோவாக வைத்து வலியவன் படத்தை இயக்கினார்.

அதோடு ஜெய்யின் வியாபாரத்தை கருத்தில் கொள்ளாமல் டபுள் மடங்கு செலவு செய்து அந்த படத்தை இயக்கினார். ஆனால், தியேட்டரில் ஒரு காட்சிகூட அப்படம் ஹவுஸ்புல்லாக ஓடவில்லை.

ஓரிரு நாட்களிலேயே தியேட்டர்களை விட்டும் ஓடியது. விளைவு, அதையடுத்து தனது புதிய படத்திற்காக ஜெய்யை வைத்து மெகா பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்த, நான் சிகப்பு மனிதன் இயக்குனர் திரு, இப்போது அப்படத்தின் பட்ஜெட்டை பாதியாக குறைத்து விட்டாராம்.

அது மட்டுமின்றி, ஜெய்க்கு பெரிதாக மார்க்கெட் இல்லை என்பதால், அதே படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கும் சமுத்திரகனி மற்றும் நாயகி டாப்சிக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறாராம். ஆக, அப்படத்தில் பெயரளவுக்குத்தான் ஜெய் ஹீரோவாம். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions