படப்பிடிப்பில் குப்பைகளை அள்ளி ரசிகர்களை கவர்ந்த ஜாக்கிசான்!

Bookmark and Share

படப்பிடிப்பில் குப்பைகளை அள்ளி ரசிகர்களை கவர்ந்த ஜாக்கிசான்!

இந்திய-சீன கூட்டு தயாரிப்பில் ‘குங்பூ யோகா’ என்ற படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

புதையலை தேடும் சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஜாக்கிசான் தொல்லியல் ஆராய்ச்சியாளராக வருகிறார். அவருக்கு உதவும் இந்திய தொல்லியல் ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தில் அம்ரியா தஸ்தர் நடிக்கிறார். வில்லன் வேடத்தில் சோனுசூட் நடிக்கிறார்.

ஜெய்பூரில் அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்துகின்றனர். ஜாக்கிசான் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டது.

இந்த படத்தில் யோகா பயிற்சியும் முக்கியமாக இடம் பெறுகிறது. பனிக்குகைக்குள் சிக்கி மூச்சு திணறும் ஜாக்கிசான் யோகா உதவியோடு எப்படி அங்கிருந்து தப்புகிறார் என்பது காட்சிப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் யோகாவின் சிறப்புகள் உலக அளவில் பேசப்படும் என்கின்றனர். படப்படிப்பில் ஜாக்கிசானை காண தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு பெரிய சவாலாக இருக்கிறது. படப்பிடிப்பில் ஜாக்கிசானின் நடவடிக்கைகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்ததும் படப்பிடிப்பு தளத்தில் சிதறி கிடக்கும் குப்பைகளை அள்ளிப்போய் குப்பைத்தொட்டியில் போடுகிறாராம்.

உலக அளவில் பிரபலமான ஒரு நடிகர் குப்பைகளை பொறுக்குவது அவருடன் நடிக்கும் இந்திய நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் வெளியே திரண்டு நிற்கும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களும் ஜாக்கிசானுடன் சேர்ந்து குப்பைகளை அள்ளுகிறார்கள்.

ஒவ்வொரு காட்சி முடியும்போதும் அதில் கஷ்டப்பட்டு பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞரை அழைத்து பணமும் கொடுக்கிறாராம். அவரை பார்த்து நடிகை அம்ரியா தஸ்தரும் பணம் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார். இந்திய உணவு வகைகளை ஜாக்கிசான் விரும்பி சாப்பிடுகிறார்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions