ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையானது... ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

Bookmark and Share

ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையானது... ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த ஒரு வாரகாலமாக அமைதியாக நடைபெற்ற போராட்டம் இன்று சென்னை உள்ளிட்ட தமிழகம் எங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.மெரீனா கடற்கரை சாலைக்கு வரும் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டன. இதனையடுத்து பேரணியாக சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

மாணவர்கள் போர்வையில் புகுந்த விஷமிகள் சிலர் காவல்துறையினர் மீது சிலர் கற்களை வீசவே, இதில் சில காவலர்கள் காயமடைந்தனர்.

இதனையடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த நிலையில் விவேகானந்தர் இல்லத்திற்கு பின்புறம் இருந்த ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதில் தீ காவல் நிலையத்திற்குள் மளமளவென பரவியது.

30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.காவல்நிலையத்திற்குள் தீ பரவவே மர்ம நபர்கள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியேறினர். அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் விஷமிகளால் வன்முறையாக மாறியுள்ளது.


Post your comment





Related News
ஹவுஸ்புல் 3 படத்தில் லிசா ஹைடன்
ஜுன் 3 வெளியாகும் ஹவுஸ்ஃபுல் 3
அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது
ராசியான வீட்டிற்கு குடிபெயர்ந்த சினேகா- பிரசன்னா..!
நடிகை இனியா வீட்டு பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை..!
அமெரிக்காவில் ஏ.ஆர்.ரகுமான் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல்..!
ஆத்திரமடைந்த தயாரிப்பாளர்: கெஸ்ட் ஹவுஸ் சென்று சமாதானப்படுத்திய தமன்னா..!
இந்தியாவில் ஐ ப்லே முதல் முறையாக வேளச்சேரியில் சிம்பு துவக்கி வைத்தார்..!
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டில் தீ விபத்து..!
சிம்புவின் புதிய வீட்டுக்கு வந்தாள் மகாலட்சுமி - ஹன்சிகா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions