தமிழக வீர விளையாட்டை எதிர்க்கும் நாயகிகள்!

Bookmark and Share

 தமிழக வீர விளையாட்டை எதிர்க்கும் நாயகிகள்!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்திருக்கும் தடையை அரசு தொடரவேண்டுமென்று பாலிவுட், கோலிவுட் நடிக நடிகைகள் கூறியுள்ளனர்.

‘விலங்குகள் உரிமைகளுக்காக வாதிடும் குழு’ என்ற விலங்குகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, காளைச்சண்டை, மாட்டுவண்டிப் பந்தயம் உள்ளிட்ட காளை மாடுகளை பயன்படுத்தும்  போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தடை விதித்துள்ளது. 

‘ஜல்லிக்கட்டு’ போட்டியின்போது காளை மாடுகள் வீரர்களால் துரத்திச்செல்லப்பட்டு உதை, குத்து, தரையில் தரதரவென இழுத்துச்செல்லுதல், கத்தியால் குத்துதல் என பல்வேறு கொடூரங்களுக்கு உள்ளாகிறது.

பொதுமக்கள், பார்வையாளர்கள் காயம் அடைதல் மற்றும் உயிரிழப்புக்கு உள்ளாகும் சூழலும் ஏற்படுகிறது. ஆகவே விலங்குகள் நலன் மற்றும் மனித பாதுகாப்பு கருதி, காளைகளைக் பாதுகாக்க ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட காளை மாடுகள் சார்ந்த போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையைத் தொடரவேண்டும்” என்று வெளியிட்டுள்ளனர்.

இந்த கோரிக்கை உள்ளடக்கிய மனுவினை, ஏராளமான ஆதரவு கையெழுத்துக்கள் வாங்கி விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளது.

இந்த மனுவில் பிரபல நடிகைகள் வித்யா பாலன், பிபாஷா பாசு, சோனாக்ஷி சின்ஹா, ஷில்பா ஷெட்டி, ரவீனா தாண்டன், எமி ஜாக்சன், ஜாக்குலின் பெர்னான்டஸ், ரிச்சா சதா, நடிகர்கள் ஜான் ஆபிரகாம், சோனு சூட், வித்யூத் ஜம்வால், ததானி, கபில் சர்மா ஆதித்யா ஷெட்டி உள்ளிட்ட பிரபல நடிகர்-நடிகைகளும்  கையெழுத்துப் போட்டு ஜல்லிக்கட்டுக்கான தடையைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்" என்று அமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions