ஜேம்ஸ் பாண்ட் புதியப்பட சண்டைக் காட்சியில் திடீர் விபத்து - கதாநாயகன் டேனியல் கிரைக்குக்கு அவசர ஆபரேஷன்

Bookmark and Share

ஜேம்ஸ் பாண்ட் புதியப்பட சண்டைக் காட்சியில் திடீர் விபத்து - கதாநாயகன் டேனியல் கிரைக்குக்கு அவசர ஆபரேஷன்

இங்கிலாந்தின் துப்பறியும் நிபுணரான ஜேம்ஸ் பாண்ட் பட வரிசை உலகெங்கிலும் உள்ள ஆக்‌ஷன் சினிமா ரசிகர்களுக்கு சுமார் அரை நூற்றாண்டு காலமாக தீனி போட்டு வந்துள்ளது.

இவ்வரிசையில் புதிய படைப்பாக உருவாகிவரும் ‘ஸ்பெக்ட்ரெ’ படத்தில் டேனியல் கிரைக்(47) கதாநாயகனாக நடித்து வருகிறார். கடந்த மாதம் ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடைபெற்ற ஒரு அதிரடி சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது இவரது கால் மூட்டில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த காயத்தையும் பொருட்படுத்தாமல் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் உள்ள பைன்வுட்ஸ் ஸ்டூடியோவில் மற்றொரு சண்டைக் காட்சியில் சமீபத்தில் பங்கேற்றதால் டேனியல் கிரைக்கின் மூட்டில் ஏற்பட்டிருந்த காயம் மேலும் அதிகமானது.

இதனால், அவர் வலியால் துடித்தார். இதனையறிந்த அவரது உதவியாளர்கள் உடனடியாக நியூ யார்க் நகரில் உள்ள டேனியல் கிரைக்கின் டாக்டர்களை தொடர்பு கொண்டு அவசர ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யுமாறு தகவல் அளித்தனர்.

உடனடியாக இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு அவர் அழைத்து வரப்பட்டார். கடந்த ஈஸ்டர் அன்று அங்கு அவரது கால் மூட்டில் அவசரமாக சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டது. தற்போது ஓய்வு எடுத்துவரும் அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என ‘ஸ்பெக்ட்ரெ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.எம். அறிவித்துள்ளது. 

 


Post your comment





Related News
`அவதார்' படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபலம்
பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
ஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்! அடக் கடவுளே…
குழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லியான் ஜேம்ஸ்!
அவதார் மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது - ஜேம்ஸ் கேமரூன்
சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்டின் “ஃபெக்ட்ரா”
சலீம் மெர்ச்சண்ட்டிடம் நிறைய கற்றுக் கொண்டேன்- லியான் ஜேம்ஸ்
லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு- எல்ரெட்
ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட்
டைட்டானிக், அவதார் படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions