டைட்டானிக், அவதார் படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்

Bookmark and Share

டைட்டானிக், அவதார் படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 'டைட்டானிக்' படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் பலியானார்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டாபார்பரா பகுதியில் ஹார்னர் பயணம் செய்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஹார்னர் உயிரிழந்தார். விபத்தில் ஹார்னர் பலியாகிவிட்டதை அவரது உதவியாளரான சில்வியா பேட்ரிஸ்ஜா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது பேஸ்புக் வலைதளத்தில் சில்வியா கூறுகையில், 'வியக்கத்தக்க திறமையும், பரந்த மனப்பான்மை கொண்ட அற்புதமான நபரை நாம் இழந்துவிட்டோம்' என்றார்.

61 வயதான ஹார்னர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். ஜேம்ஸ் கேமரூனின் 3 திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இதுதவிர அவதார், 'ஸ்டார் டிரக்' திரைப்படங்களுக்கும், கிளாசிக்கல் திரைப்படங்களான 'எ பியூட்டிபுல் மைன்ட்', 'பீல்ட் ஆப் ட்ரீம்ஸ்' மற்றும் 'அப்பல்லோ 13' ஆகியவற்றுக்கும் ஹார்னர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
`அவதார்' படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபலம்
பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
குழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லியான் ஜேம்ஸ்!
அவதார் மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது - ஜேம்ஸ் கேமரூன்
சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்டின் “ஃபெக்ட்ரா”
சலீம் மெர்ச்சண்ட்டிடம் நிறைய கற்றுக் கொண்டேன்- லியான் ஜேம்ஸ்
லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு- எல்ரெட்
ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட்
ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார் பிரியதர்ஷன்..!
‘வாயா என் வீரா’ பாடல் மூலம் அறிமுகமான லியோன் ஜேம்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions