வானவில் வாழ்க்கை டீமுடன் மீண்டும் ஜேம்ஸ்வசந்தன்!

Bookmark and Share

வானவில் வாழ்க்கை டீமுடன் மீண்டும் ஜேம்ஸ்வசந்தன்!

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜேம்ஸ்வசந்தன். அவரை சுப்ரமணியபுரம் படத்தில் இசையமைப்பாளராக்கினார் சசிகுமார். அந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் என்ற பாடல் ஹிட்டானதால் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்து வந்த அவர், தற்போது திரைக்கு வந்துள்ள வானவில் வாழ்க்கை என்ற படத்தில் டைரக்டராக புரோமோஷன் பெற்றுள்ளார்.

அதோடு, இது எனது கனவு படம் என்று கூறிய ஜேம்ஸ் வசந்தன், இந்த படம் வெற்றி பெறும் என்றும் கூறி வந்தார். அதேபோல் தற்போது வானவில் வாழ்க்கை படம் வெற்றி பெற்றிருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, இதே உற்சாகத்தோடு அடுத்தும் ஒரு படத்தை இயக்கப்போவதாக கூறி வருகிறார். அப்படி அவர் இயக்கும் புதிய படத்திலும் வானவில் வாழ்க்கை படத்தில் நடித்தவர்களே நடிக்கிறார்களாம்.

ஆனால் இந்த படம் வானவில் வாழ்க்கை போலில்லாமல் வேறொரு கதைக்களத்தில் உருவாகிறதாம். முக்கியமாக, வானவில் வாழ்க்கை இசைப்படம் என்பதால் 16 பாடல்களை வைத்த ஜேம்ஸ்வசந்தம், அடுத்த படத்தில் குறைவான பாடல்களையே வைப்பதற்கு முடிவு செய்துள்ளாராம்.


Post your comment





Related News
`அவதார்' படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபலம்
பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
குழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லியான் ஜேம்ஸ்!
அவதார் மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது - ஜேம்ஸ் கேமரூன்
சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்டின் “ஃபெக்ட்ரா”
சலீம் மெர்ச்சண்ட்டிடம் நிறைய கற்றுக் கொண்டேன்- லியான் ஜேம்ஸ்
லியான் ஜேம்ஸ் இந்த வருடத்தின் கண்டுப் பிடிப்பு- எல்ரெட்
ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட்
டைட்டானிக், அவதார் படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்
ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தார் பிரியதர்ஷன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions