இரு மொழிகளில் உருவாகும் சைக்கோ த்ரில்லரில் நடிக்கிறார் ஜனனி ஐயர்..!

Bookmark and Share

இரு மொழிகளில் உருவாகும் சைக்கோ த்ரில்லரில் நடிக்கிறார் ஜனனி ஐயர்..!

கடந்த வருடம் தமிழில் வெளியாகிய த்ரில்லர் படமான 'தெகிடி' யில் நடித்த ஜனனி ஐயருக்கு தமிழில் படம் இல்லாவிட்டாலும் மலையாளத்தில் பிஸியாகத்தான் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாக இருக்கும் சைக்கோ த்ரில்லர் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. படத்தின் பெயர் 'ம-சு-க'.

என்னடா சீன மொழியில் டைட்டில் வைத்து விட்டார்களோ என குழம்ப வேண்டாம். மஞ்சள்-சுவப்பு-கருப்பு என்கிற வார்த்தைகளின் சுருக்கம் தான் அது. தவிர ம-சு-க என்றால் பிரேசில் மொழியில் 'மிகுந்த வலி' என்கிற அர்த்தமும் இருக்கிறதாம்.

பசுபதி மற்றும் பிரதாப் போத்தன் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். பசுபதி ஏற்கனவே மலையாளத்தில் 'பிக் பி', 'நம்பர் 22 மதுரா பஸ்' உட்பட நான்கு படங்களில் நடித்திருக்கிறார்.

ஜனனி பத்திரிகையாளராகவும், பசுபதி லாயராகவும், பிரதாப் போத்தன் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாகவும் நடிக்க இருக்கிறார்கள். ஒரு பேட்டிக்காக பிரதாப் போத்தனை சந்திக்க மூணாறு செல்லும் ஜனனி ஐயர், அங்கே பசுபதியை சந்திக்கிறார்.

அதை தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் சீட் நுனிக்கு வரவைக்கும்படி இருக்குமாம். வரும் ஏப்ரலில் கொடைக்காணலில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions