முதன்முதலாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த ஜனனி ஐயர்!

Bookmark and Share

முதன்முதலாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த ஜனனி ஐயர்!

தமிழில் ‘அவன் இவன்’, ‘தெகிடி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். தமிழ் மட்டுமல்லாது சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ‘மா சூ கா’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பசுபதி, பிரதாப் போத்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெயன் வன்னேரி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வருகிற ஜுலை 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ஜனனி ஐயர் முதன்முதலாக ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளாராம். பத்திரிகையாளராக வரும் ஜனனி ஐயருக்கு இப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் இருக்கிறது என இயக்குனர் கூறினாராம்.

முதலில் படக்குழுவினர் ஸ்டண்ட் காட்சியில் ஜனனி ஐயரை நடிக்க வைக்க மிகவும் தயங்கியுள்ளனர். அவருக்கு பதிலாக டூப் போட்டு வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என பரிசீலித்து வந்த நிலையில், ஜனனி ஐயரே ஸ்டண்ட் காட்சியில் தானே நடிப்பதாக முன்வந்தாராம்.

பின்னர், அவரை வைத்து ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கியுள்ளனர். அந்த சண்டைக் காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions