பேயாக நடிக்கும் ஜாங்கிரி மதுமிதா!

Bookmark and Share

பேயாக நடிக்கும் ஜாங்கிரி மதுமிதா!

சின்னத்திரை தொடர்களில் நடித்துக்கொண்டிருந்த மதுமிதாவை சந்தானம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க அழைத்து வந்தார். அந்த படத்தில் இருந்து ஜாங்கிரி மதுமிதாவாக மாறிய அவர், தற்போது பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார்.

ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு அட்டக்கத்தி, ராஜா ராணி, ஜில்லா, தெனாலிராமன், காக்கி சட்டை, காஞ்சனா-2 என பல படங்களில் நடித்த மதுமிதா, தற்போது சினிமாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் காமெடி நடிகையாகியிருக்கிறார்.

அதேசமயம், சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், 13ம் பக்கம் பார்க்க படத்தை இயக்கிய புகழ் மணி தற்போது இயக்கி வரும் வெள்ளிக்கிழமை 13-ந்தேதி -என்ற படத்தில் பேய் வேடத்தில் நடிக்கிறார். டார்லிங் படத்தில் நிக்கி கல்ராணி நடித்தது போன்று மதுமிதாவின் முகத்தையும் பேய் கெட்டப்பில் மாற்றி நடிக்க வைத்து வருகின்றனர்.

முக்கியமாக, தனது முகத்தை பார்த்தால் பயப்பட மாட்டார்கள் என்பதால் தன்னை அடையாளமே தெரிந்து கொள்ளாத வகையில் பயங்கரமாக தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார் மதுமிதா.


Post your comment





Related News
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
தம்பதியாக ஹோட்டல் தொழிலில் இறங்கிய பிரபல நடிகை மற்றும் நடிகர்! என்ன ஸ்பெஷல்
சந்தானத்தால் கைவிடப்பட்ட பிரபல காமெடி நடிகை- பரபரப்பு பேட்டி
கோலிவுட் அருந்ததி ராயாக மாறிய மதுமிதா?
காதல்காலம் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட கமல்ஹாசன்
சின்னத்திரையிலும் காமெடிக்கே முதலிடம் கொடுக்கும் மதுமிதா!
மூணே மூணு வார்த்தை இரண்டு மொழிகளில் ஏன்? மதுமிதா விளக்கம்
தொடங்கியது மானே தேனே பேயே!
கவர்ச்சி வேண்டாம்… காமெடி மட்டும் போதும்… நடிகை மதுமிதா
ஈமு கோழி பிசினஸ் தொடங்கிய நடிகை மதுமிதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions