கபாலி படம் பார்க்க சென்னை வந்த ஜப்பான் ரஜினி ரசிகர்கள்!

Bookmark and Share

கபாலி படம் பார்க்க சென்னை வந்த ஜப்பான் ரஜினி ரசிகர்கள்!

ரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். குறிப்பாக ஜப்பானில் உள்ள ரசிகர்கள் ரஜினி மீது அதிக பாசம் கொண்டவர்கள்.

அதில் ஒரு ஜப்பான் தம்பதி யக்தீஷ், அனிதா இவர்கள் கபாலி படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து விமானத்தில் சென்னை வந்து தங்கினர்.

ஆல்பர்ட் தியேட்டரில் படம் பார்க்க முடிவு செய்தனர். இன்று அதிகாலையில் முதல் காட்சி பார்ப்பதற்காக நேற்று மாலையே தியேட்டருக்கு வந்து தமிழக ரசிகர்களுடன் கியூவில் காத்து இருந்தனர். பின்னர் முதல் காட்சியில் ‘கபாலி’ படம் பார்த்தனர்.

யக்தீஷ் கூறும் போது, நாங்கள் எல்லாம் ரஜினியின் தீவிர ரசிகர்கள். கபாலி பார்ப்பதற்காக வந்தோம் என்றார்.

அவர்கள் தியேட்டர் முன் வைக்கப்பட்டு இருந்த கபாலி ரஜினி கட்அவுட் முன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். ஜப்பான் மொழி பேசும் அவர்கள் தமிழில் கபாலி பட வசனங்களை ஆர்வத்துடன் சொல்லி மகிழ்ந்தனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions