உயிருடன் வாழும் நண்பரின் கதையில் நடிக்கும் ஜெயசூர்யா..!

Bookmark and Share

உயிருடன் வாழும் நண்பரின் கதையில் நடிக்கும் ஜெயசூர்யா..!

இயக்குனர் ரஞ்சித் சங்கர், மலையாளத்தில் கடந்த வருடம் மம்முட்டியை வைத்து இயக்கிய வர்ஷம் படம் அவரின் வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்தியது.

ஒரே மகனை இழந்துவிட்ட சோகத்தில் முடங்கிவிடாமல் அடுத்து பெற்றோர் செய்யவேண்டியது என்ன என்கிற சமூகப்பார்வையை அதில் காட்டியிருந்தார் ரஞ்சித். இதில் மட்டுமல்ல, இவர் இயக்கத்தில் மலையாளத்தில் சில வருடங்களுக்கு முன்பு பாஸஞ்சர் என்கிற படம் வெளியானது.

தினசரி ரயில் பயணத்தின்போது தான் சந்திக்கும் யாரோ ஒருவருக்கு ஆபத்து என்றதும் தனது உயிரையும் பொருட்படுத்தாது அவரை காப்பாற்ற கிளம்பும் ஒரு பயணியும், அவருக்கு துணையாக வரும் ஒரு டாக்ஸி ட்ரைவரையும் வைத்து, சமூக உணர்வுடன் மனித நேயத்தின் உச்சத்தை படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் ரஞ்சித் சங்கர்.

தற்போது  மேட் பார் ஈச் அதர் என்னும் பெயரில் லவ் ஸ்டோரி ஒன்றை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ரஞ்சித் சங்கர் இந்தப்படத்தில் ஜெயசூர்யாவை கதாநாயகனாக்கியுள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய புண்யாலன் அகர்பத்தீஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவரும் ஜெயசூர்யா தான்.

இதுநாள் வரை யாரோ வாழ்ந்து மறைந்த ஒருவரின் வாழ்க்கையை உண்மைக்கதி என ர்டுக்கும் பாணியில் இருந்து விலகி, தான் நீண்ட நாட்களாக பார்த்து வரும், தனது நண்பனின் கதையையே படமாக இயக்குகிறார் ரஞ்சித் ஷங்கர். காரணம் தனது நண்பனின் வாழ்க்கை சினிமாவாக வெளியுலகினருக்கு தெரியவேண்டிய அளவுக்கு அறுபுதமான மனிதர் என்கிறார் ரஞ்சித் ஷங்கர்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions