
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் ஜெயசுதாவை பலிகடா ஆக்கிவிட்டனர் என்று நடிகை ரோஜா கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:–
தெலுங்கு நடிகர் சங்க தலைவர் தேர்தலில் ஜெயசுதா தோல்வி அடைந்துள்ளார். ராஜேந்திர பிரசாத் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே ஆறு தடவை இச்சங்கத்தில் முரளிமோகன் தலைவராக இருந்தார்.
தற்போது தெலுங்கு தேசம் கட்சியில் எம்.பி.யாக அவர் இருக்கிறார். அவர்தான் ஜெயசுதாவை தலைவர் பதவிக்கு நிறுத்தினார். இதன் மூலம் ஜெயசுதா மேல் அரசியல் சாயம் பூசப்பட்டது.
ராஜேந்திர பிரசாத்தோ அரசியல் சாயமின்றி பொதுவானவராக நின்றார். தேர்தலில் நிற்கும் முன்பே நடிகர் நடிகைகளை சந்தித்து பேசினார். நீங்கள் ஆதரவு தந்தால் நிற்கிறேன் என்றார். அவரின் அணுகுமுறை எல்லோருக்கும் பிடித்தது. ஆதரவு தருவதாக உறுதி அளித்தோம். போட்டியின்றி தேர்வு செய்யவும் முயற்சித்தோம். ஆனால் திடீர் என்று யாரிடமும் பேசாமல் ஜெயசுதா தலைவர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தார்.
ஜெயசுதா சீனியர் நடிகை எல்லோருக்கும் அவர் மேல் மரியாதை இருக்கிறது. முரளி மோகன் பின்னணியில் இருந்ததால் அவருக்கு ஓட்டு போட யாருக்கும் விருப்பம் இல்லை. முரளி மோகன் ஆறு தடவை தலைவராக இருந்தார்.
அப்போது ஒரு தடவை ஜெயசுதாவுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் எம்.பி.யான பிறகும் கூட தெலுங்கு நடிகர் சங்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சித்தார். இதற்காக ஜெயசுதாவை நிறுத்தி பலிகடா ஆக்கிவிட்டார்.
Post your comment