பரபரப்பாக பேசப்பட்ட 'சுந்தரியம்மா கொலை வழக்கு' திரைப்படமாகிறது...!

Bookmark and Share

பரபரப்பாக பேசப்பட்ட 'சுந்தரியம்மா கொலை வழக்கு' திரைப்படமாகிறது...!

மலையாள புலனாய்வு திரைப்படங்களில் இடம்பெறும் கதைகளோ அல்லது சம்பவங்களோ நிஜத்தில் நடைபெற்ற உண்மைச்சம்பவங்களில் இருந்துதான் எடுக்கப்படுவது வழக்கம்.

அந்தவகையில் 2012ல் கேரளாவை சேர்ந்த சுந்தரியம்மா என்னும் பெண் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. மீன் மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்த இந்த பெண்ணை கொலை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்ததும், ஆனால் அது போலீசாரால் ஜோடிக்கப்பட்டது என்பதை கண்டறிந்து, அதனை கண்டித்த நீதிமன்றம் தவறாக கைது செய்யப்பட நபருக்கு சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் ஒரு லட்ச ரூபாய் மான் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டதும் சரித்திர சிறப்பு வாய்ந்த தீர்ப்பு.

இந்த கொலை வழக்கு பச்சக்குதிர என்கிற இதழில் தொடராகவும் வெளிவந்தது.. நடிகரும் ’தலப்பாவு’, ’ஒளிமுறி’ ஆகிய படங்களை இயக்கியவருமான மதுபால் என்பவர் தான், தற்போது இந்த கொலை வழக்கை மையப்படுத்தி புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இவரது முந்தைய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக போகாவிட்டாலும் நல்ல விமர்சனங்களை பெற்றன. இந்தப்படத்தில் தண்டனை கைதி கதாபாத்திரத்தில் ஜெயசூர்யா நடிப்பார் என தெரிகிறது.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions