'ஆடு' டான்ஸ் மூலம் ஜெயசூர்யாவை குஷியாக்கிய சிறுவன்..!

Bookmark and Share

'ஆடு' டான்ஸ் மூலம் ஜெயசூர்யாவை குஷியாக்கிய சிறுவன்..!

என்னதான் சிறப்பான நடிகர்களாக இருந்தாலும், விதமான நடிப்பை வெளிப்படுத்தினாலும் குழந்தைகளை தங்கள் பக்கம் கவர்ந்திழுக்கும் கேரக்டர்களில் நடிப்பது என்பது அவர்களுக்கு சவாலான விஷயம் தான்.

தமிழில் அந்த வேலையை சில முன்னணி ஹீரோக்கள் திட்டமிட்டு செய்து வருகிறார்கள். ஆனால் மலையாளத்தில் அப்படி யாரும் மெனக்கெடுவது இல்லை. முன்னணி நடிகர்களே அப்படி என்றால், ஜெயசூர்யா போன்ற இரண்டாம் நிலை நடிகர்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

ஆனால் சமீபத்தில் யூ டியூப்பில் வெளியான ஒரு வீடியோ ஜெயசூர்யாவை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெயசூர்யா நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான 'ஆடு ஒரு பீகர ஜீவியானு' படத்தில் ஜெயசூர்யாவுக்கு என அறிமுகப்பாடல் உண்டு.

அந்தப்படத்தை பார்த்த நான்கு வயது சிறுவன் ஒருவன், அடிக்கடி அந்தப்பாடலை ஒலிக்கவிட்டு தனது வீட்டில் உள்ள போர்ட்டிகோ முன்னால் படத்தில் ஜெயசூர்யா அறிமுகமாகவதை போல ஹைஸ்பீடில் ஓடிவருகிறான்.

இந்தக்காட்சியை பையனின் தந்தை வீடியோவாக்கி யூ டியூப்பில் ஏற்ற, இது ஜெயசூர்யாவின் பார்வைக்கும் போனது. நமக்கு இப்படி ஒரு குழந்தை ரசிகரா என ஆச்சர்யப்பட்டு போன ஜெயசூர்யா, “தாங்க்யூடா மோனே” என நன்றி சொல்லி அந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்


Post your comment





Related News
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions