'ஜாடிக்கேத்த மூடி' யாக உருவாகும் காதல் கதையில் ஜெயசூர்யா..!

Bookmark and Share

'ஜாடிக்கேத்த மூடி' யாக உருவாகும் காதல் கதையில் ஜெயசூர்யா..!

மலையாளத்தில் சில வருடங்களுக்கு முன்பு 'பாஸஞ்சர்' என்கிற படம் வெளியானது. தினசரி ரயில் பயணத்தின்போது தான் சந்திக்கும் யாரோ ஒருவருக்கு ஆபத்து என்றதும் தனது உயிரையும் பொருட்படுத்தாது அவரை காப்பாற்ற கிளம்பும் ஒரு பயணியும், அவருக்கு துணையாக வரும் ஒரு டாக்ஸி ட்ரைவரையும் வைத்து மனித நேயத்தின் உச்சத்தை படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் ரஞ்சித் சங்கர்.  

அந்தப்படத்தில் திலீப் தான் கதாநாயகன் என்றாலும் அவரைவிட அதிக காட்சிகளில் படம் முழுக்க வந்த சீனிவாசனும், நெடுமுடி வேணுவும் ரசிகர்களை தங்களது நடிப்பால் வெகுவாக கவர்ந்தார்கள்.

அப்போதே அனைவரின் பாராட்டையும் அள்ளிய இயக்குனர் ரஞ்சித் சங்கர், கடந்த வருடம் மம்முட்டியை வைத்து இயக்கிய 'வர்ஷம்' படமும் அவரின் வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்தியது.

தற்போது 'மேட் பார் ஈச் அதர்' என்னும் பெயரில் லவ் ஸ்டோரி ஒன்றை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ரஞ்சித் சங்கர் இந்தப்படத்தில் ஜெயசூர்யாவை கதாநாயகனாக்கியுள்ளார்.

ஏற்கனவே ஜெயசூர்யாவை வைத்து 'புண்யாலன் அகர்பத்தீஸ்' என்ற படத்தை இயக்கியபோது ஜெயசூர்யா காட்டிய ஆர்வமும் பணிவும் சிரத்தையும் இயக்குனரை கவர்ந்துவிட்டதல் மீண்டும் இந்தப்படத்தில் ஒன்றிணைந்திருப்பது எளிதாக சாத்தியமானதாம். 

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions