ஆம்புலன்ஸ் தொலைபேசி சேவையின் தூதராகிறார் ஜெயசூர்யா..!

Bookmark and Share

ஆம்புலன்ஸ் தொலைபேசி சேவையின் தூதராகிறார் ஜெயசூர்யா..!

மலையாள நட்சத்திரங்கள், அது நடிகரோ அல்லது நடிகையோ சினிமாவில் நடிப்பதையும் தாண்டி சமூகத்திற்கு உதவும் விதத்தில் தங்களது பங்களிப்பு இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.

மோகன்லால், மம்முட்டி உட்பட சில முன்னணி நடிகர்களும், காவ்யா மாதவன், மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில நடிகைகளும் ஏதாவது ஒரு சமூக அமைப்பில் உறுப்பினர்களாகத்தான் இருக்கின்றனர்.

முக்கியமான நேரங்களில் அந்த அமைப்பின் கூட்டங்களில் கலந்துகொண்டு, அவற்றின் திட்டங்களை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கின்றனர்.இப்போது பொதுமக்களின் உயிர்காக்கும் முக்கிய சேவையான ஆம்புலன்ஸ் (102) சேவையை கொச்சின் மாவட்ட எல்லை வரை ஒருமுகப்படுத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தை ஏஞ்சல்ஸ் (Active Network Group of Emergency Life Savers) என்கிற அமைப்பு தான் அறிமுகப்படுத்துகிறது.  இந்த திட்டப்படி நகரிலோ, கிராமத்திலோ எங்கு வசித்தாலும் போன் செய்தால், மூன்று நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் அவர்களது இருப்பிடத்துக்கு வந்துவிடுமாம்.

இந்த திட்டத்தின் தொலைபேசி சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக அதன் நல்லெண்ண தூதராக பொறுப்பேற்க இருக்கிறார் நடிகர் ஜெயசூர்யா. இதில் தூதராவது குறித்து பேஸ்புக்கில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயசூர்யா. இந்த திட்டம் வரும் ஞாயிறு அன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமயில் துவக்கி வைக்கப்பட இருக்கிறது.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions