16 வயதில் ரூ.3,000 சம்பளத்தில் ஹீரோயினான ஜெயலலிதா

Bookmark and Share

16 வயதில் ரூ.3,000 சம்பளத்தில் ஹீரோயினான ஜெயலலிதா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயலலிதா தான் ஹீரோயினாக நடித்த முதல் படத்திற்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் வாங்கினார். தனது தாய் சந்தியாவுடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற இடத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து கன்னட படமான ஸ்ரீ சைலா மகாத்மே படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜெயலலிதா.

அதன் பிறகு ஒய்.ஜி. பார்த்தசாரதியின் நாடக குழுவில் சேர்ந்து நடித்து வந்தார். தனது தாயுடன் பார்ட்டி ஒன்றுக்கு சென்ற இடத்தில் ஜெயலலிதாவை பார்த்த கன்னட இயக்குனர் பி.ஆர். பந்துலு அவரை சின்னட கொம்பே என்ற கன்னட படத்தில் கல்யாண் குமாருக்கு ஜோடியாக நடிக்க வைக்க நினைத்தார்.

தனது விருப்பத்தை பந்துலு சந்தியாவிடம் தெரிவிக்க முதலில் அவர் மறுத்துவிட்டார். பள்ளி மாணவியான ஜெயலலிதாவின் படிப்பு பாதிக்கப்படாத வகையில் படப்பிடிப்பை நடத்துவதாக அவர் வாக்குறுதி அளித்த பிறகே சந்தியா சம்மதம் தெரிவித்தார்.

ஹீரோயினாக நடிக்க ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் ரூ. 3 ஆயிரம். அதன் பிறகு அவர் வெண்ணிற ஆடை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.


Post your comment





Related News
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
அஜித்தை எப்படி அழைப்பார் தெரியுமா ஜெயலலிதா!
ஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது! 2023 வரை இங்குதான் இருக்கும்! பிரபல சாமியார் அசோக்ஜி பரபரப்பு
ஜெயலலிதா செப்டம்பர் 22 லேயே அவர் இறந்து விட்டார், இது மர்டர் - காணொளி
ஜெயலலிதா உடலை பார்க்கபோன த்ரிஷாவுக்கு நடந்த கொடுமை!
அம்மா உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!
ஜெ.வுக்கு அஞ்சலி: பலரும் கண்டுகொள்ளாத சசிகலாவுக்கு கும்பிடு போட்ட நடிகர் சத்யராஜ்
ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம், தேவதை: நடிகை சரோஜா தேவி உருக்கம்
ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி
அம்மா... அன்பில் தாய்.. அழகில் தேவதை.. கண்டிப்பில் ஆசிரியர்! - கலைப்புலி தாணு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions