இசை அமைப்பாளர் கோவர்தனுக்கு 10 லட்சம் உதவி: ஜெயலலிதா அறிவிப்பு

Bookmark and Share

இசை அமைப்பாளர் கோவர்தனுக்கு 10 லட்சம் உதவி: ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


பிரபல இசைஅமைப்பாளர் கோவர்தன், இசைஅமைப்பாளர்களான எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, தேவா என பல புகழ் பெற்ற இசைஅமைப்பாளர்களிடம் உதவி இசைஅமைப்பாளராக பல வருடங்கள் பணியாற்றியவர் ஆவார்.

தற்போது தனது மனைவியுடன் சேலத்தில் வசித்து வரும் 88 வயதான கோவர்தன், தான் எவ்வித வருமானமும் இல்லாமல் வறுமைச்சூழலில் வாழ்ந்து வருவதாகவும், தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு நிதியுதவி வழங்கி தங்களைக் காப்பாற்றுமாறும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கோவர்தனின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து கோவர்தனுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த 10 லட்சம் ரூபாய் கோவர்தன் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்படும். இந்த வைப்பு நிதியில் இருந்து வட்டியாக மாதந்தோறும் ரூ.8,125 கோவர்தனுக்கு கிடைக்கப்பெறும்.

மேலும், கோவர்தன் செவித்திறன் குறைபாட்டை நீக்கும் வகையில் அவருக்கு அரசு பொது மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளித்து, காதொலிக் கருவி ஒன்றினை வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
அஜித்தை எப்படி அழைப்பார் தெரியுமா ஜெயலலிதா!
ஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது! 2023 வரை இங்குதான் இருக்கும்! பிரபல சாமியார் அசோக்ஜி பரபரப்பு
ஜெயலலிதா செப்டம்பர் 22 லேயே அவர் இறந்து விட்டார், இது மர்டர் - காணொளி
ஜெயலலிதா உடலை பார்க்கபோன த்ரிஷாவுக்கு நடந்த கொடுமை!
அம்மா உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!
ஜெ.வுக்கு அஞ்சலி: பலரும் கண்டுகொள்ளாத சசிகலாவுக்கு கும்பிடு போட்ட நடிகர் சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions