முதல்வருக்கு நன்றி தெரிவித்த திரைப்பட சங்கம் – ஏன்?

Bookmark and Share

முதல்வருக்கு நன்றி தெரிவித்த திரைப்பட சங்கம் – ஏன்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக இன்று சட்டமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் சார்பில் முதல்வருக்கு நன்றி அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

அன்புடையீர் வணக்கம்!

தமிழக வரலாற்றில் பாரம்பரியமிக்க சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் “டாக்டர் அம்மா” அவர்கள் இன்று கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டாக மிகப்பெரிய விழா எடுத்து விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தது ஒட்டு மொத்த திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது

இந்த விருதுகள் மூலம் பல கலைஞர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள ஒரு உந்து சக்தியாக இது இருக்கும்.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் அமையவிருக்கும் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா தங்கள் பொற்கரங்களால் நிகழவிருக்கும் இதே காலக்கட்டத்தில், இந்த விருது எங்களை போன்ற கலைஞர்களுக்கு இரட்டிப்பு சந்தோசமாக இருக்கிறது.

​​மாண்புமிகு “தமிழ்நாடு முதலமைச்சர்” டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

தென்னிந்திய நடிகர் சங்கம்

 


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
அஜித்தை எப்படி அழைப்பார் தெரியுமா ஜெயலலிதா!
ஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது! 2023 வரை இங்குதான் இருக்கும்! பிரபல சாமியார் அசோக்ஜி பரபரப்பு
ஜெயலலிதா செப்டம்பர் 22 லேயே அவர் இறந்து விட்டார், இது மர்டர் - காணொளி
ஜெயலலிதா உடலை பார்க்கபோன த்ரிஷாவுக்கு நடந்த கொடுமை!
அம்மா உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!
ஜெ.வுக்கு அஞ்சலி: பலரும் கண்டுகொள்ளாத சசிகலாவுக்கு கும்பிடு போட்ட நடிகர் சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions