ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடிய திரைப்பட வர்த்தக சபை

Bookmark and Share

ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடிய திரைப்பட வர்த்தக சபை

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (சேம்பர்) நேற்று (பிப் 24) தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாளை கொண்டாடியது.

67 கிலோ எடைகொண்ட கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. சங்க வளாகத்தில் நடந்த இந்த விழாவில் வர்த்தக சபை பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.

விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் சசிகுமார்,  துணைத் தலைவர்கள் சங்கய்யா, விஜயகுமார், சுப்பிரமணியம், செயலாளர்கள் காட்ரகட்ட பிரசாத், அருள்பதி, கட்டிட குழு உறுப்பினர் ரவி கொட்டாரக்கரா, பொருளாளர் கே.முரளிதரன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சேம்பரின் முன்னாள் தலைவரும், வர்த்தக சபை கட்டிடக்குழுவின் தலைவருமான சி.கல்யாண் பேசியதாவது: ஜெயலலிதாவின் அனுமதி பெற்று இந்த பிறந்த நாளை கொண்டாடுகிறோம். கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளின்போது 6 ஆயிரத்து 600 பேருக்கு இலவச தலைகவசங்கள்  வழங்கினோம்.

இந்த ஆண்டு 6 ஆயிரத்து 700 பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்க இருக்கிறோம். தொடர்ந்து 3 நாட்கள் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறோம். இந்த விழாக்களில் பொது மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க இருக்கிறோம். என்றார்.


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
அஜித்தை எப்படி அழைப்பார் தெரியுமா ஜெயலலிதா!
ஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது! 2023 வரை இங்குதான் இருக்கும்! பிரபல சாமியார் அசோக்ஜி பரபரப்பு
ஜெயலலிதா செப்டம்பர் 22 லேயே அவர் இறந்து விட்டார், இது மர்டர் - காணொளி
ஜெயலலிதா உடலை பார்க்கபோன த்ரிஷாவுக்கு நடந்த கொடுமை!
அம்மா உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!
ஜெ.வுக்கு அஞ்சலி: பலரும் கண்டுகொள்ளாத சசிகலாவுக்கு கும்பிடு போட்ட நடிகர் சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions