ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி

Bookmark and Share

ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அதற்கு விளக்கம் அளிக்கும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் நடிகை கவுதமி.

அந்த கடிதம் பிரதமர் அலுவலகத்திற்கு சென்று சேரவே இல்லை என தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் கவுதமி உண்மையில் கடிதம் அனுப்பினாரா? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.

தற்போது இதற்க்கு விளக்கம் அளித்துள்ளார் கவுதமி. "நான் அனுப்பிய கடிதம் நேரடியாகவும், சமூக வலைத்தளத்திலும், மீடியாவிலும் மக்கள் அனைவரின் பார்வைக்கும் சென்றது, ஆனால் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கிவரும் மோடிக்கு சென்று சேராதது எப்படி என்று தெரியவில்லை."

"ஒரு மாநிலத்தில் முதல்வர் மர்மமாக இறந்துள்ளார். அதை தெளிவுபடத்தவேண்டியது அரசு. அதை தெரிந்துகொள்ள கூட தெருவில் இறங்கி தான் போராட வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions